தனிஒருவனக்கு உணவில்லையெனில் இஜ்ஜகத்தினை அழித்திட நினைத்து கடைசியில் உணவில்லாமல் பசியில் இறந்து போன என் தலைவன் இவன். உலகிற்கு இவன் மற்றுமொரு கவிஞன். சிலருக்கு பைத்தியக்காரன். உணர்ந்தவர்களுக்கு இவன் ஒரு ஞானி. மகேசனை பூஜித்து மக்களை ஒதுக்கிய குலத்தில் (குளத்தில்) பூத்து சாதி துறந்த ஒரு அக்னி புஷ்பம் பாரதி.
பாரதி பிறந்த நாளும், இருந்த மண்ணும் எனக்கும் சொந்தம் என்று சொல்வதில் சற்று கர்வபட்டுக்கொள்கிறேன். ஆம், இருவரும் டிசம்பர் 11 ல் பிறந்தோம் (90 வருட இடைவெளியில்!). பாரதி புழங்கிய புதுவையில் நானும் பிறந்து வளர்ந்தேன். பாரதியின் கவிதைகளை கருத்தரித்த குயில் தோப்பில் நானும் அலைந்திருக்கிறேன் (அந்த குயில் தோப்பு இப்போது (காதல்)கிளிகளின் தோப்பாகிவிட்டது வேறு விஷயம்!) புதுவையில் அவன் வாழ்ந்த வீட்டில், அவன் அமர்ந்த ஆசனத்தையும், அவன் உலவிய முற்றத்தையும் ஏங்கி பார்த்தவன் நான். ஏன் பாரதி இறந்து போனாய்? இருந்திருக்கலாமே இன்னும் சில நூற்றாண்டுகள்? அபத்தக்குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது என்னுள்.
வானதி பதிப்பகத்தாரிடம் அனுமதி வாங்கி "பாரதியார் கவிதைகள்" புத்தகப்பெயரின் இரு வார்த்தைகளுக்கிடையில் இடைக்குறி இட்டு மேலே "காதல்" என எழுதத்தோன்றுகிறது எனக்கு! ஆச்சர்யமாய் இருக்கிறதா? ஆம். தேசம், நேசம், வீரம், அன்பு, பண்பு, என பல கவிதைகள் அவன் எழுதி இருந்தாலும், அவை அனைத்திலும் நான் பாரதி இத்தேசத்தின் மேல் கொண்ட காதலை காண்கிறேன். அப்படியெனில் அது காதல் கவிதைகள் தானே!
எனக்கு பிடித்த பாரதியின் வைர வரிகள்..
1. "உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சியுனை புகழ்ந்தால் ஊரார் மேனி சிலிர்க்குதடி"
2. "விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டிய படி செலும் வரம் கேட்டேன்
அசைவுரு மதி கேட்டேன், நிதம் தவமென சுடர் தரும் உயிர் கேட்டேன் "
3. "போனதெல்லாம் கனவினைப்ப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ, இந்த ஞா லமும் பொய் தானோ? ........
காண்பதெல்லாம் மறையுமென்றால் , மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ, இந்த ஞாலமும் பொய் தானோ?"
இன்னும் எவ்வளவோ.....
Intha tamil aarvam tamilnattula irukkumpodu velippadavillainu enukku ekkama irukku gopi. romba miss panniten un tamil aarvathai. Keep it up. I am your blog follower now for the tamil kadal.
ReplyDeleteநன்றி sir. இந்த தமிழ் ஆர்வம் எனக்குள்ள என்னைக்கும் இருக்கு. அந்நிய மண்ணின் தனிமை, எனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த தமிழ்ச் சிங்கத்தை தட்டி எழுப்பிடிச்சு! தனிமை கொடுமை போக்க தமிழை தழுவிக்கொண்டேன்!
ReplyDeleteஎன்றென்றும் அன்புடன்,
கோபி.
mama............. u r rocking.........ungal peiyarai tamil gopi endru matrikolalam...i never knew all these days.......i know u as a artist.....anyway tis is grt....proud to be ur mama magal.......
ReplyDeleteநன்றி சுபா. இந்த அந்நிய மண்ணின் தனிமை என்னையே எனக்கு அறிமுகப்படுத்தியது!
ReplyDelete