Wednesday, 15 December 2010

அழகு

எது அழகு? அகமா, புறமா, நிறமா, உடலா, உள்ளமா? எது தான் அழகில்லை? அனைத்தும் அழகு தான். அஃறினை அழகு. உயர்திணை அதைவிட அழகு.  ஒரு பெண்ணின் இரு கன்னங்களையும் இரு கைகளில் ஏந்தி, கண்ணோடு கண் சேர்த்து பாருங்கள். எந்த பெண்ணும் அழகாக தெரிவாள். ஏனெனில் பெண் ஒரு அழகான படைப்பு.

தோல் அழகுதான், தொய்யாத வரை!.முடி அழகு தான், உதிராத வரை.இதயம் அழகு தான். இயங்கும் வரை! எதையும் அழகாய் பாருங்கள். அழகாய் தெரியும். இங்கு அனைத்தும் அழகாகவே படைக்கப்பட்டிருகின்றன.

அனைத்தையும் அழகாய் பார்க்க ஒரு மன பக்குவம் வேண்டும். நீங்கள் அழகாய் பார்க்க, உங்கள் சுற்றுபுறம் அழகாகும். சுற்றியும் அழகாய் இருக்க, நீங்கள் குதூகலமாவீர்கள்.உங்கள் சந்தோஷம் உங்களை அழகாக்கும்.நீங்கள் அழகாக, உங்கள் வாழ்க்கை அழகாகும். இத்தேசம் அழகாகும். இப்பிரபஞ்சம் அழகாகும்.

ஆக, அழகு பார்வையில் தான் இருக்கிறது.

அழகை பார்க்க, அழகாய் பார்க்க பழகிக்கொள்வோம்.

2 comments:

  1. Anaithilum azhagai paarpadu satru kadinam than!Beauty lies in one's attitude.If it is worst,we cant find any beauty there.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே (நண்பியே!). அதைதான் நானும் சொல்கிறேன். அழகாய் பார்க்கும் மனப்பான்மையை (Attitude) பழகிக்கொள்வோமே!

    ReplyDelete