என்ன விந்தையான வாழ்க்கை இது? எதையோ தேடி, எங்கெங்கோ அலைந்து, தேடும் நாமே தொலைந்து போகிறோம்! தேடுவது தான் வாழ்க்கையா? தேடத்தான் இங்கு வந்தோமா? எங்கு தேடினாலும் மிஞ்சுவது தேடல்தானே?
கண்ணதாசன் தான் நினைவுக்கு வருகிறார்:
எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?
இது தான் பாதை, இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்....
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! மாறிவரும் பயணத்தை புரிந்து கொள்வது எப்படி? புரிவதற்குள் பயணம் முடிந்து விட்டால்? புரியாமலேயே போய்விடுமோ? மயக்கம் தான் அதிகமாகிறது!!
ஆனால் தேடலிலும் ஒரு சுகம் இருக்கிறது. 'அப்பாடா' என்று அமராமல் ஓடிகொண்டே இருப்பதில் ஒரு வித கிறக்கம் இருக்கத்தான் செய்கிறது. இது ஓடுபவர்களுக்கு மட்டுமே புரிந்த விஷயம். தேடியது கிடைக்க, கிடைத்ததன் மூலம் ஒரு தேடல். தேடலின் முடிவு தேடல். தேடலின் ஆரம்பம் தேடல். தேடும் போது புலப்படும் விஷயங்கள், தேடிய விஷயத்தை விட உன்னதமானவை.
அப்படி என்ன தான் தேடுகிறாய் என்று கேட்கிறீர்களா?
அதைதான் நானும் தேடிகொண்டிருக்கிறேன் !!!

Thaeduvadu sugamalla...adu oru maha imsai!!There is no peace of mind to those who are going on running&searching for something they already lost.So,we must put a . to it in anyone phase of our life inorderto live atleast peacefully(though not happily.)....
ReplyDeleteமிக்க நன்றி. சரியாகச் சொன்னீர்கள். ஏதோ ஒரு திரைப்பட பாடலில் வருவது போல "தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே". ஆனால், தேடலில் உள்ள ஒரே ஒரு சுவாரஸ்யமான விஷயம், தேடும்போது கிடைக்கும், தேடியதல்லாத புதிய விஷயங்கள். பல சமயங்களில், இவை தேடிய விஷயத்தை விட உபயோகமாய் இருக்கும்(இதை அனுபவ ரீதியாய் சொல்கிறேன்). ஒரு விதத்தில் தேடல் கூட ஒரு வித மனப்பான்மை (Attitude) தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஆட்ஷேபனை இல்லை என்றால், உங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன் (என்னுடன், என் தளத்தில் கலந்துரையாடும் முதல் நபர் நீங்கள்!)
ReplyDeleteமேலும், உங்களின் கடைசி இரண்டு வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைக்கின்றன. சந்தோஷமாய் இல்லாவிட்டாலும், நிம்மதியாய் வாழ்வோம் என்கிறீர்கள். அது எப்படி? சந்தோஷம் இல்லாமல் நிம்மதி வருமா?
ReplyDelete